ஒரு இரவு பசியோடு தூங்கி பார் மறுமுறை பசி என்று கேட்பவருக்கு ஒரு தேனீராவது வாங்கி கொடுக்க மனம் சொல்லும்...
அவசரத்தேவைக்கு அழைந்து திரிந்து பணம் கேட்டவனுக்கு மட்டுமே அதே அவசர கதியில் பணம் கேட்பவரின் மனநிலை புரியும் கையில் இருக்கும் சிறு தொகையாவது கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்ப மனம் சொல்லும்...
உயிராக நேசித்தவர்களை இழந்த பின் தான் இறப்பு எவ்வளவு கொடூரம் என்பதை உன் மனம் அறியும்..அதன் பின் இறந்தவர் வீட்டில் ஆறுதல் சொல்வது முதல் ஆளாக நீயாக தான் இருக்க மனம் சொல்லும்....
எதுவுமே தனக்கென்று நிகழாதவரை நாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை எதையும்...
அவர் இடத்தில் நாமிருந்தால் என மனம் சொல்ல தொடங்கினால் எல்லாமே மாறி போகும்...
அன்பை விதைத்திடுவோம்....
Super
ReplyDeleteஉதவி செய்பவன் உயர்ந்த நிலையில் இருந்தால் தான் அந்த உதவியை பெறுபவன் அதை உயர்வாக பேசுகிறான்
- ஆறிலிருந்து அறுபது வரை