பங்குச் சந்தை டிரேடிங் குறித்து பலராலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை பார்க்கலாம்.
ஷேர் டிரேடிங் என்றால் என்ன?
டிரேடிங் என்றாலே வியாபாரம்/வர்த்தகம் என்று நமக்குத் தெரியும். பங்குச் சந்தையில், குறுகியகாலத்துக்கு பங்குகளை வாங்கி விற்கும் முறையை டிரேடிங் என்று அழைக்கிறோம்.
ஒரு பங்கை வாங்கிய அன்றே விற்பது என்பதை தினசரி வர்த்தகம் (டே டிரேடிங்) Day Trade அன்று அழைப்போம்.இப்படிச் செய்வதில் குறுகிய காலத்தில் பெரிய லாபம் கிடைக்கும் என் றாலும், குறுகிய காலத்தில் பணத்தை இழக்கவும் வாய்ப்புள்ளது. என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்!
ஷேர் டிரேடிங் வகைகள் என்னென்ன?
(Share Trading Types)
"டிரேடிங் வகைகள் என்பது வாங்கி விற்கும் கால இடைவெளியை(Time Duration) வைத்தே வரையறுக்கப்படுகிறது.
ஒரு பங்கை வாங்கியபின் விற்கும் கால அளவு சில நிமிடங்கள் முதல் சில மணி நேரமாக இருந்தால், அதை 'டே டிரேடிங்' (Day Trade) என்று அழைப்போம்.
வாங்கி விற்கும் கால இடைவெளி, சில தினங்கள் முதல் சில வாரங்கள் இருந்தால், அதை 'ஸ்விங் டிரேடிங்(Swing Trading) என்றழைப்போம்.
தினசரி வர்த்தகத்தின் வகைகள் என்னென்ன?
தினசரி வர்த்தகத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, பங்கின் விலை ஏறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வாங்கி விற்பது; பங்கின் விலை இறங்கும் என்ற கணிப்பில் முதலில் விற்றுவிட்டு, பின் அதே பங்கை விலை குறைந்த பின் வாங்குவது.
தினசரி வர்த்தகம் செய்வதற்கு எவ்வளவு பணம் தேவை?
டிரேடிங் செய்வதற்கு எவ்வளவு பணம் தேவை என்பது ஒவ்வொரு தனிநபரும் அவர்கள் எவ்வளவு பங்குகள் வாங்கி விற்க நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மாறும். குறைவான எண்ணிக்கையில் பங்குகளை வாங்கி விற்க நினைப் பவர்கள் குறைவான முதலீட்டையும்,அதிக எண்ணிக்கையில் பங்குகளை வாங்கி விற்க நினைப்பவர்கள் அதிக முதலீட்டையும் செய்ய வேண்டியிருக்கும்.
தினசரி வர்த்தகத்தில் மார்ஜின் தொகை என்றால் என்ன?
தினசரி வர்த்தகம் என்பது அன்றே வாங்கி, அன்றே விற்பது என்பதா புரோக்கர்கள் குறைவான தொகையில் அதிக மதிப்புக்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கின்றனர். உதாரணமா ஒருவர் ரூ.10,000 செலுத்தி வியாபார செய்வதாக எடுத்துக்கொண்டா புரோக்கர் அவரை ரூ.50,000 பங்குகளை வாங்க அனுமதிப்பார். இதில், நாம் செலுத்தும் ரூ.10,000 என்பதைதா மார்ஜின் தொகை என்று அழைப்போம் .இதை ஐந்து மடங்கு அனுமதி என் அழைக்கலாம். சில புரோக்கர்கள் மடங்கு, 15 மடங்கு மற்றும் 20 மடங்கு அனுமதி அளிக்கிறார்கள். ஆனால் வரக்கூடிய நாள்களில் செபி விதிக்கும் கட்டுபாடுகளால், அதிக அளவு வியாபார அனுமதி கொடுப்பது படிப்படியாக குறைக்கப்படும்.
தினசரி வர்த்தகத்தில் 'லாங்' என்றால் என்ன?
தினசரி வர்த்தகத்தில் ஏறுமுகமாக உள்ள பங்குகளை முதலில் வாங்கி, பின் விலை சாதகமாக ஏறும்போது விற்று லாபம் பார்க்கும் முறையைத்தான் "லாங்"l (LONG) என்று அழைப்போம். இத்தகைய வியாபாரம் செய்யும்போது, ஒருவேளை ஏறும் என்று நம்பி, பங்குகளை வாங்கிய பின் இறங்கினால், நாம் அதை விற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை தேவை எனில், நாம் அதை டெலிவரி எடுத்துக்கொள்ளலாம். இதில் கவனிக்க வேண்டியது, நாம் ரூ.10,000 கட்டி ரூ.50,000மதிப்புள்ள பங்குகளை வாங்கி யிருந்தால்,புரோக்கர் கொடுத்த ரூ40,000 கட்டினால் மட்டுமே பங்குகளை டெலிவரி எடுக்க முடியும்.
ஷார்ட் டிரேடிங் என்றால் என்ன?
தினசரி வர்த்தகத்தில் ஒரு பங்கின் விலை ஏறும் என்று நினைத்து, பங்குகளை முதலில் வாங்கி பிறகு விற்பதுபோல, ஒரு பங்கின் விலை இறங்கும் என்று நினைக்கும்போது பங்குகளை முதலில் விற்றுவிட்டு, பின்பு விலை குறைந்த பின் வாங்கி லாபம் பார்க்கும் முறை ஆகும்.
இது தினசரி வர்த்தகத்தின் ஒரு வழிமுறை ஆகும். அதே சமயம் நாம் முதலில் விற்றுவிட்டு, பின் வாங்கும் போது விலை குறைவாக இருந்தால் லாபகரமாகவும் விலை ஏற்றத்தில் இருந்தால் நஷ்டமாகவும் முடிய வாய்ப்புண்டு.
தினசரி வர்த்தகத்தில் "லாங்" போகும்போது ஒருவேளை விலை இறங்கினால் டெலிவரி எடுத்து சில தினங்கள் கழித்து விற்றுக் கொள்ளலாம் என்று பார்த்தோம் ஆனால், ஷார்ட் வியாபாரம் செய்யும்போது நஷ்டம் வந்தாலும் அன்றே அந்த வியாபாரத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
'ஷார்ட்' வியாபாரத்தை அன்றே முடிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?
ஷார்ட் வியாபாரம் என்று நீங்கள் முதலில் விற்கும்போது யாரோ ஒருவர் உங்களிடமிருந்து வாங்கியிருக்கிறார். வாங்கிய அவருக்கு நீங்கள் பங்குகளை டெலிவரி செய்ய வேண்டும் எனவே, வாங்கிய அன்றே நீங்கள் பங்குகளை வாங்கிவிட்டால், அந்த வியாபாரம் முடிவுக்கு வரும். நீங்கள் வாங்கிய பங்கு முன்பு விற்றவருக்கு செல்வதாகஎடுத்துக் கொள்ளலாம். நீங்கள் பங்குகளை விற்ற பிறகு வாங்க வில்லை எனில், மூன்றாம் நாள் வேறொரு நபரிடமிருந்து வாங்கிக் கொடுக்கும். அப்போது பங்கை வாங்கிய விலைக்கும் நீங்கள் விற்ற விலைக்கும் உள்ள வித்தியாசத்துடன் அபராதக் கட்டணமும் உங்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
பங்குகளை தேர்வு செய்வது எப்படி?
"டிரேடிங் செய்ய பங்குகளைத் தேர்வு செய்யும் போது இரண்டு முக்கியமான காரணிகளைப் பார்க்க வேண்டும் ஒன்று, வால்யூம் (Volume)அதிகமாக இருக்க வேண்டும். அதாவது, அதிக volume இருந்தால் நாம் எப்போது வேண்டுமாலும் எளிதாக வாங்க முடியும், எளிதாக விற்க முடியும். அதே சமயம், இந்த வகை பங்குகள் நெருக்கமாக வியாபாரம் ஆகும் என்பது வாங்கக்கூடிய விலை சந்தை விலையையொட்டி இருக்கும்.
அதேபோல், அந்தப் பங்கின் நகர்வு, அதாவது ஒரு நாளின் உச்ச விலைக்கும், குறைந்தபட்ச விலைக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்க வேண்டும். அப்போது நல்ல லாபத்தை எடுக்க முடியும்."
ஸ்டாப்லாஸ் என்றால் என்ன?
"ஸ்டாப்லாஸ்" (STOP LOSS) என்பது நாம் விய பாரத்தில் ஈடுபடும் போது, விலையானது நமக்கு எதிராகத் திரும்பினல், நஷ்டம் வரும்போது அந்த நஷ்டத்தைத் தடுக்கவில்லை என்றால் அதே நஷ்டம் அதிகமாக மாறி, நம் முதலீட்டின் கணிசமான பகுதியைக் குறைத்துவிடும். ஆகவே, நஷ்டத்தைத் தடுக்க, குறிப்பிட்ட விலையைக் குறிப்பிட்டு அதில் வியாபாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
ரிஸ்க்கைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?
ரிஸ்க் என்பது ஷேர் டிரேடிங்கில் ஏற்படும் நஷ்டத்தையே குறிக்கிறது.எனவே, ரிஸ்க்கைக் குறைக்க, நாம் வாங்கும் பங்குகளின் எண்ணிக்கையை நாம் எடுக்கும் ரிஸ்க் அளவுக்கேற்ப குறைக்க வேண்டும்.பேராசை பெரு நஷ்டத்தையும்,கஷ்டத்தையும் தரும்,எனவே அடிப்படை விசயங்களை கற்றுக் கொண்டு பேராசை படாமல் நீண்ட கால அடிப்படையில் பங்குகளை வாங்கி லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.
Share Market பற்றி சந்தேகங்கள் மற்றும் மேலும் அறிந்து கொள்ள comment பகுதியில் பதிவிடவும்.
நன்றி.
super
ReplyDeleteThank you please share with your friends
DeleteSuper
ReplyDeleteThank you please share with your friends
Delete